கர்நாடகத்தில் புதிதாக மதுக்கடைகளை திறக்க மாட்டோம்: சித்தராமையா

கர்நாடகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் புதிதாக மதுக்கடைகளை திறக்க மாட்டோம்: சித்தராமையா

சித்ரதுர்கா: கர்நாடகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் சித்தராமையா இவ்வாறு தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: நாங்கள் மதுக்  கடைகளை திறக்கவில்லை. நாங்கள் திறக்கிறோம் என்று யார் சொன்னது? இது குறித்து நாங்கள் யோசிப்போம் என்று அமைச்சர் கூறியுள்ள நிலையில் நாங்கள் திறக்க மாட்டோம்.  அதே வேளையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மதுபானக் கடைகளை அமைக்க பரிந்துரைக்கும் திட்டத்தை கர்நாடக கலால் துறை, அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள 10 பேர் கொண்ட மத்திய குழுவிடம் கள நிலவரங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அதே வேளையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 236 தாலுகாக்களில் உள்ள 195 தாலுகாக்கள் வறட்சி பாதித்த தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் குறைவான நீர் குறித்து மத்திய குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் விதிமுறைகளின்படி ரூ.4,860 கோடி கோரப்பட்டது. உண்மையான இழப்பு சுமார் ரூ.30,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

மதுக்கடைகள் தொடர்பான திட்டம் மக்கள் விரோதமானது என்று கூறி பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com