இஸ்ரேலில் சிக்கிய கர்லுகி எம்.பி. பத்திரமாக மீட்பு!

புனித யாத்திரைக்காக ஜெருசலேம் சென்றிருந்த மேகாலயா எம்.பி., பாத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இஸ்ரேலில் சிக்கிய கர்லுகி எம்.பி. பத்திரமாக மீட்பு!


புதுதில்லி: புனித யாத்திரைக்காக ஜெருசலேம் சென்றிருந்த மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர் டபிள்யூ.ஆர். கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்கிய குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 600-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 2000-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாகவும்,  இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - காஸா சண்டையில் இது மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. 

இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,97235 226748 என்ற தொலைபேசி எண்ணிலும், cons1.telaviv@mea.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை தெரிவிக்கலாம் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

மேலும், தேவையற்ற பயணத்தை தவிா்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தியது.

இதனிடையே, "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, ஜெருசேலமுக்கு புனித யாத்திரை சென்ற மேகாலயாவின் 27 பேர் பெத்லகேமில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்" என்று முதல்வர் சங்மா சனிக்கிழமை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், புனித யாத்திரைக்காக இஸ்ரேல் ஜெருசேலம் சென்றிருந்த மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர் டபிள்யூ.ஆர். கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்கிய குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பெத்லகேம் நகரில் சிக்கியிருந்தவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், திங்கள்கிழமை (அக்.9) எகிப்து வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக என்று தகவல் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த இந்தியர்களில் 27  பேர் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com