மணிப்பூர்: மோரே நகரில் ஊரடங்கு தளர்வு!

மணிப்பூரில் உள்ள தெங்னௌபால் மாவட்டத்தின் இந்திய-மியான்மர் எல்லை நகரமான மோரேவில் தினசரி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மணிப்பூரில் உள்ள தெங்னௌபால் மாவட்டத்தின் இந்திய-மியான்மர் எல்லை நகரமான மோரேவில் தினசரி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தென்னௌபால் மாவட்ட ஆட்சியர் கிரிஷன் குமார் கூறுகையில், 

மணிப்பூரின் மோரேவில் தினசரி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருந்து, உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

மறு உத்தரவு வரும் இந்த ஊரடங்கு தளர்த்தப்படுவதாக திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டம் ஒழுங்கு அமல்படுத்துவதில் உள்ள ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தைகளைச் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com