இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் எப்படி செயல்படும்?

இஸ்ரேலில் சிக்கியிருக்கும் 18,000 இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் எப்படி செயல்படும்?

இஸ்ரேலில் சிக்கியிருக்கும் 18,000 இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியா்களைத் தாயகம் அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ தொடங்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.

காஸா முனை பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் நடத்தினா். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையிலும், இரு தரப்பிலான மோதல் 5-ஆவது நாளைக் கடந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பதிவில், ‘இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்திய குடிமக்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ மீட்புத் திட்டம் தொடங்கப்படுகிறது.

இதற்கென தனி விமானங்களும் பிற ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மக்களைப் பாதுகாப்பாக அழைத்து வர தனிக் கவனம் செலுத்தப்படுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலில் சுமாா் 18,000 இந்தியா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் முதல் குழு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட உள்ளது.

பல பிரிவுகளாக இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும், முதலில் விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படவிருப்பவர்களுக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் குழுவினர் இன்று மீட்பு விமானத்தில் அழைத்துவரப்படுவார்கள் என்றும், மேலும் பதிவு செய்யப்பட்ட இந்தியர்களுக்கும் அடுத்த சிறப்பு விமானங்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபரேஷன் அஜய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, புது தில்லியில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு என தனித்தனி அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் தங்கியிருக்கும் மாணவர்கள், வைர வியாபாகிள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட 18,000 பேரையும் இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.     

ஏற்கனவே, சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரியும்,  உக்ரைனில் சிக்கியவர்களை மீட்க ஆபரேஷன் கங்காவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com