வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

இரண்டு நாள் பயணமாக காஷ்மீருக்கு வந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வைஷ்ணவி தேவி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 
வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

இரண்டு நாள் பயணமாக காஷ்மீருக்கு வந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வைஷ்ணவி தேவி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

ரியாசி மாவட்டத்தின் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அங்கு கோயிலில் இரண்டு திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். 

மாதா வைஷ்ணவி தேதியின் சன்னதிக்கு வரும் பக்தர்களும் ஒரு வழியும், தரிசித்து வெளியேறுபவர்களுக்கு மற்றொரு வழியும் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த நிலையில், குடியரசுத் தலைவரால் தொடங்கப்படும் இரண்டாவது திட்டம், மறுவடிமைக்கப்பட்ட பார்வதி பவன் ஆகும். இந்த பவனில் 1,500 லாக்கர்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தங்கும் பக்தர்கள் இந்த லாக்கரை பயன்படுத்திக்கொள்ளுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது. 

புதன்கிழமை ஸ்ரீநகருக்கு வந்தடைந்த குடியரசுத் தலைவர் முர்மு கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வந்து மறைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர், காஷ்மீர் பல்கலையின் 20வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, உரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹ் குடியரசுத் தலைவருக்கு விருந்து அளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com