தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். என்டிஏ.வையும் பலப்படுத்த வேண்டும். பாஜக அமைப்புக் கூட்டங்களை நடத்தி 2024 தேர்தலுக்கான வியூகங்களைத் தயாரித்து வருகிறது.
ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலும் எங்களுக்கு முக்கியம். நாங்கள் முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைப் பார்த்தால், பல எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இது, நாங்கள் தேர்தலில் போட்டியிடும் தீவிரத்தை காட்டுகிறது. வெற்றி பெறவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக யாரும் கூற முடியாது. நரேந்திர மோடி அரசின் கீழ், ஏழைகள் பல திட்டங்களின் பலன்களைப் பெற்றுள்ளனர் என்றார்.
மிசோரம், சத்தீஸ்கர் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக இதுவரை அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் நான்கு மத்திய அமைச்சர்கள் உட்பட 18 எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கால்நடை பராமரிப்பு, சிகிச்சை மையத்துக்கு அடிக்கல்

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

