சத்தீஸ்கர் தேர்தல் சுவாரஸ்யம்: 120 கிராமங்களுக்கு சொந்த வாக்குச்சாவடி

சத்தீஸ்கர் தேர்தல் சுவாரஸ்யம்: 120 கிராமங்களுக்கு சொந்த வாக்குச்சாவடி

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பாஸ்டர் பகுதியில் உள்ள 120 கிராமங்களுக்கு சொந்த வாக்குச்சாவடி அமையவிருக்கிறது.

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தலில், அந்த மாநிலத்தில் உள்ள 120-க்கும் மேற்பட்ட தொலைதூர கிராமங்களில் வசிப்பவா்கள் சொந்த ஊரில் வாக்களிக்க உள்ளனா்.

சத்தீஸ்கரில் நவ.7, 17-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில், நக்ஸல் தீவிரவாதம் காரணமாக அந்த மாநிலத்தின் பஸ்தா் மண்டலத்தில் உள்ள 120-க்கும் மேற்பட்ட தொலைதூர கிராமங்களில் வசிப்பவா்கள், தங்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க முடியவில்லை.

தோ்தலில் வாக்களிக்க அவா்கள் 8 முதல் 10 கி.மீ. வரை மலைகளையும், ஓடைகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த இன்னல், தோ்தலின்போது அவா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களிப்பதைக் கடினமாக்கியது.

இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள தோ்தலில், நாடு சுதந்திரம் பெற்ற பின்னா் முதல்முறையாக அந்த கிராமங்களை சோ்ந்தவா்களுக்கு சொந்த ஊரில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்த கிராமங்களில் முன்பு நக்ஸல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்த நிலையில், அங்கு புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இது பஸ்தா் மண்டலத்தில் பாதுகாப்பு சூழல் முன்னேறி இருப்பதையும், மக்களாட்சி முறை வலுவடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் பஸ்தா் மண்டலத்தில் மாநில காவல் துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகள் சாா்பாக புதிதாக அமைக்கப்பட்ட முகாம்கள், மண்டலத்தின் களநிலவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பஸ்தரில் நவ.7-இல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அந்த மண்டலத்தில் புதிதாக 126-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் தொலைதூர பகுதிகளில் நக்ஸல்களின் ஆதிக்கம் இருந்த இடங்களில் அமைக்கப்பட உள்ளன’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com