மேலாடை இல்லாமல் நிர்வாக ஆலோசனை! ஏர்-ஏசியா சிஇஓ-வுக்கு குவியும் விமர்சனம்!

ஏர்-ஏசியா நிறுவனத்தின் நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி மேலாடை இல்லாமல் பங்கேற்றதோடு, பெண் ஒருவர்  உதவியுடன் மசாஜ் செய்துகொண்டு பங்கேற்றதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 
டோனி ஃபெர்னான்டஸ்
டோனி ஃபெர்னான்டஸ்
Updated on
1 min read

ஏர்-ஏசியா நிறுவனத்தின் நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி, மேலாடை இல்லாமல் பங்கேற்றதோடு, பெண் ஒருவர்  உதவியுடன் மசாஜ் செய்துகொண்டு பங்கேற்றதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 

ஏர்-ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி ஃபெர்னான்டஸ். இவர் விடியோ மூலம், நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். 

அதில், மேலாடை இல்லாமல், இந்தோனேஷிய பெண் மசாஜ் செய்துவிட, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். 

இது தொடர்பான புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் அவர் பதிவேற்றி தனது நிறுவனத்தின் பணிச்சூழல் கலாசாரம் குறித்து மேற்கோள் காட்டியுள்ளார். 

அதில், ''மிகவும் அழுத்தம் நிறைந்த வாரம். அதனால், மசாஜ் செய்துகொள்ள பரிந்துரை கிடைத்தது. நான் விரும்பும் இந்தோனேஷியா மற்றும் ஏர்-ஏசியா கலாசாரம் மூலம் மசாஜ் செய்துகொண்டு நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியும். மிகவும் ஆச்சரியமான நாள்கள் காத்திருக்கின்றன. நாங்கள் எதைக் கட்டமைத்துள்ளோம் என்பதற்கு பெருமைகொள்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார். 

ஏர்-ஏசியா பணிச்சூழல் குறித்து சிலர் வியந்து பாராட்டினாலும், சிலர் இதற்கு விமர்சனங்களையே முன்வைத்துள்ளனர். 

ஏர்-ஏசியாவில் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்காத பணிச்சூழல் இருக்கலாம், ஆனால், அதனைத் தெரியப்படுத்தும் விதம் இதுவல்ல என சிலர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com