நல்லாட்சி தொடர மக்கள் வாய்ப்பளிப்பார்கள்: மல்லிகார்ஜுன கார்கே

தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. 
நல்லாட்சி தொடர மக்கள் வாய்ப்பளிப்பார்கள்: மல்லிகார்ஜுன கார்கே
Published on
Updated on
1 min read

தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் குறித்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் விவாதிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் குழு தலைவர் கோவிந்த் தோதாஸ்ரா, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் ராஜஸ்தான் ஸ்கிரீனிங் குழு தலைவர் கௌரவ் கோகோய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், 

காங்கிரசின் நல்லாட்சியால் சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு கொண்ட மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது. 

ராஜஸ்தானின் சட்டப்பேரவை தேர்தல் குறித்து மத்திய தேர்தல் குழுவின் முக்கிய கூட்டம் இன்று நடைபெற்றது. நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

ராஜஸ்தானில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏற்படும் ஆட்சிமாற்றத்தை முறியடித்து இந்த முறை ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நல்லாட்சித் தொடர மக்கள் எங்களை வாழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com