ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகள்: மார்க் ஸக்கர்பெர்க்

ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸக்கர்பெர்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள், விரைவில் ஒரே செல்லிடபேசியில், இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு செல்லிடபேசி எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இனி, வாட்ஸ்ஆப்பில் ஒரு எண்ணை லாக் அவுட் செய்ய வேண்டிய அவசியமோ அல்லது இரண்டு செல்லிடபேசிகளைப் பயன்படுத்தும் பிரச்னையோ, மாற்றி மாற்றி வாட்ஸ்ஆப் பயன்படுத்தும்போது தவறானவர்களுக்கு தகவல் அனுப்பிவிடுவோமோ என்ற அச்சமோ தேவையில்லை என்றும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்துக்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து, ஆட் அக்கவுண்ட் என்று சேர்த்துக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் செயலிகளை மட்டும் டவுன்லோடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com