அயோத்தியில் ராம ஜென்மபூமி வளாகத்தை பார்வையிட்ட உ.பி. முதல்வர் 

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்தை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.
அயோத்தியில் ராம ஜென்மபூமி வளாகத்தை பார்வையிட்ட உ.பி. முதல்வர் 

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்தை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.

இந்த பயணத்தின் போது, ​​தொழிலாளர்களின் நலம் மற்றும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஹனுமன்கர்ஹி கோயிலுக்கு சென்று முதல்வர் வழிபாடு செய்தார். இந்நிகழ்வின்போது ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து ராமா் கோயில் கட்டும் பணி தொடங்கியது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலையைச் செய்வதற்குத் தேவையான இரு அரியவகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு, செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயில் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டும் சூழலில், மூலவரான குழந்தை ராமரின் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கோயில் கட்டுமானக் குழுத் தலைவா் நிருபேந்திரா மிஸ்ரா அண்மையில் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com