

மும்பை: புணேயில் இருந்து தில்லி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் மும்பை விமானத்தில் கைது செய்யப்பட்டார்.
புணேயில் இருந்து தில்லி செல்லும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பல்லவ் அஜய் என்பவர் சத்தம் போட்டார்.
பயணி ஒருவரின் சத்தத்தை அடுத்து விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, பயணியின் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை. வெடிகுண்டு இருப்பதாக சத்தமிட்டது புரளி என்பது உறுதியானது.
இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பல்லவ் அஜய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.