
புணேவில் பயிற்சியின் போது பியிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே பியிற்சி விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. பாராமதி விமானநிலையத்திற்கு வடக்கே 2 மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இருப்பினும் இந்த விபத்தில் பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் நடந்த 2ஆவது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த 19ஆம் தேதி கஃப்டல் கிராமம் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி மற்று துணை விமானி இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.