கனிம உற்பத்தி 2023 ஆகஸ்டில் 12.3 சதவிகிதம் அதிகரிப்பு

இந்திய சுரங்க பணியகத்தின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு 111.9 ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கனிம உற்பத்தி 2023 ஆகஸ்டில் 12.3 சதவிகிதம் அதிகரிப்பு
Published on
Updated on
1 min read

இந்திய சுரங்க பணியகத்தின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு 111.9 ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 8.3 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஆகஸ்ட் மாதத்தில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி நிலைகள் முறையே நிலக்கரி 684 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 28 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 3110 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 1428 ஆயிரம் டன், குரோமைட் 148 ஆயிரம் டன், தாமிரம் 10 ஆயிரம் டன், தங்கம் 113 கிலோ கிராம், இரும்புத்தாது 181 லட்சம் டன், ஈயம் 30 ஆயிரம் டன், மாங்கனீசு 233 ஆயிரம் டன், துத்தநாகம் 132 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 365 லட்சம் டன், பாஸ்போரைட் 107 ஆயிரம் டன், மாக்னசைட் 10 ஆயிரம் டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022- ஆகஸ்ட் மாதத்தைவிட, 2023 ஆகஸ்ட் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கிய கனிமங்கள்:

தங்கம் (46.8%), பாஸ்போரைட் (40.7%), மாங்கனீசு தாது (36.9%), தாமிரக் கனிமங்கள் (18.9%), நிலக்கரி (17.8%), இரும்புத் தாது (14.9%), சுண்ணாம்புக்கல் (13.8%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (9.9%), மாக்னசைட்  (4.5%), பெட்ரோலியம் (கச்சா) (2.1%), குரோமைட் (1.4%).

முக்கிய கனிமங்களின் எதிர்மறை வளர்ச்சி: பாக்சைட் (-1.5%), துத்தநாகம் (-4.1%), லிக்னைட் (-5.4%), ஈயம் (-15.1%).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com