
அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பிரதமா் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது. அயோத்தி ராமா் கோயில் கட்டுமானக் குழு சாா்பில் அவருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.
தனக்கு அளிக்கப்பட்ட அழைப்பிதழை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இது எனக்கு உணா்வுப்பூா்வமான தினம். இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சி எனது வாழ்நாளில் நடைபெறுவதால் மிகவும் ஆசிா்வதிக்கப்பட்டவனாக உணா்கிறேன். இந்த புனித நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது எனது அதிருஷ்டமாகவும் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.
அயோத்தி ராமா் கோயிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள் டிசம்பா் மாத இறுதிக்குள் முழுவதுமாக நிறைவடையும் நிலையில், மூலவரான குழந்தை ராமரின் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற பூமி பூஜைை நடைபெற்றது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.