
திரிபுராவின் 20-வது ஆளுநராக இந்திர சேனா ரெட்டி நல்லு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திர சேனாவுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மாணிக் சாஹா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஜே.கே.சின்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்ற பிறகு இந்திர சேனா செய்தியாளர்களிடம் கூறியது,
திரிபுராவின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மாநிலத்தில் வெளிப்படைத்தன்மை, அதிகாரமளித்தல் மற்றும் பொறுப்புக்கூறலைக் கொண்டுவர விரும்புகிறேன். முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான மாநில அரசுடன் ஒத்துழைப்பேன் என்றார்.
இதையும் படிக்க: ஐபிஎல் 2024 ஏலம் எப்போது?
இந்திர சேனா தெலங்கானாவில் மூத்த பாஜக தலைவராகவும், ஆந்திரத்தில் மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்தார். சத்யதேவ் என் ஆர்யாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து இந்திர சேனா பதவியேற்றுக்கொண்டார்.
நீதிபதிகள் சப்யசாசி தத்தா புரகாயஸ்தா மற்றும் பிஸ்வஜித் பாலிட் ஆகியோரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.
தற்போது, தலைமை நீதிபதி உள்பட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.