ம.பி. தேர்தல்: முன்னாள் முதல்வர் கமல் நாத் வேட்புமனு தாக்கல்

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், சிந்த்வாரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 
ம.பி. தேர்தல்: முன்னாள் முதல்வர் கமல் நாத் வேட்புமனு தாக்கல்

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல் நாத், சிந்த்வாரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின்றன. 

இந்நிலையில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல் நாத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், '1979ல் முதல்முறையாக சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்டேன். கடந்த 40 ஆண்டுகளாக சிந்த்வாரா மக்களிடம் இருந்து தனக்கு கிடைத்த ஆதரவு, அன்புக்கு நன்றி. மக்கள்தான் என்னுடைய. சொத்து. இந்த தேர்தல் மத்திய பிரதேசத்தின் எதிர்காலம். தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ஊழலையும், பணவீக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். வேலைவாய்ப்பின்மையில் கவனம் செலுத்தவில்லை. விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தவில்லை' என்று குற்றம் சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com