கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்படி என கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தம்மனம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணம் நான்தான் என கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ரிமோட் செயலி முறையில் ஐ.ஈ.டி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது உறுதியாகியுள்ளது.
சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டோமினிக், “கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன்’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கமேனியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு!

அமைதி, பாதுகாப்பு நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக மாறும்: உ.பி. முதல்வர்
படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
பயிர்க் கடன் தள்ளுபடி, கல்விச் செலவு... விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

