கொச்சி குண்டுவெடிப்பில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்: சுகாதாரத் துறை அமைச்சர்

கொச்சி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் 4 பேர் 50-60 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது, களமச்சேரியில் சா்வதேச மாநாட்டு அரங்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் தீக்காயங்களுடன் போராடி வருகின்றனர், அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அதில், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர் என்றார். 

கேரள மாநிலம், கொச்சி அருகே சா்வதேச மாநாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனா்; மேலும் 51 போ் காயமடைந்தனா். அவா்களில் 18 போ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

ஏற்கெனவே 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் மேலும் 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து கொச்சி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com