'கரோனாவால் பாதித்தவர்கள் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க...' - அமைச்சர் அறிவுறுத்தல்

கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 
'கரோனாவால் பாதித்தவர்கள் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க...' - அமைச்சர் அறிவுறுத்தல்

கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். 

குஜராத்தில் சமீபத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடனத்தின்போது பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிறுவன் உள்பட 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 

'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஓர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வேலை செய்வதை, கடுமையான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

திடீர் மாரடைப்புக்கு ஏற்படாமல் தவிர்க்க 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான உடற்பயிற்சி அல்லது தீவிர வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com