
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகரில் உள்ள புகழ்பெற்ற அம்பா தேவியின் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள மோடி இன்று காலை விமானம் மூலம் அகமதாபாத்தை அடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அம்பாஜிக்கு அருகிலுள்ள சிக்லா கிராமத்திற்குச் சென்றார்.
பிரதமர் மோடி கோயில் நகரமான அம்பாஜியை அடைந்தபோது, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து அவரை வரவேற்றனர்.
பின்னர், உள்ளூர் தலைவர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பிரதமர் மோடியை சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
அம்பாஜியில் வழிபாடு செய்தபிறகு, மெஹ்சானாவின் கெராலு தாலுகாவில் உள்ள தபோடா கிராமத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் ரூ.5,950 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
செவ்வாய்க்கிழமை, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியாவில் நடைபெறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.