
நொய்டா: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி குடியிருப்பொன்றில் மூன்று பெண்களுடன் சச்சரவில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒருவரைத் தாக்கியும் உள்ளார். இந்தக் காட்சிகள் லிப்ஃடில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்தச் சச்சரவு, பெண் ஒருவர் தனது வளர்ப்பு பிராணியுடன் லிப்ஃடில் செல்லவிருந்த போது தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனது கைப்பேசியை எடுக்க, மற்றொரு பெண் கைப்பேசியைப் பறிக்க முயற்சிக்கிறார். இதனால் கோபமுற்ற அதிகாரி, அந்தப் பெண்ணைத் தாக்குகிறார்.
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் அங்கு வந்து ஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கத் தொடங்குகிறார்.
இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு விரைந்த காவலர்கள் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: முகேஷ் அம்பானிக்கு 3வது மின்னஞ்சல்: ரூ.400 கோடி கேட்டு மிரட்டல்
நொய்டா செக்டர் 108-இல் உள்ள குடியிருப்பு ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நொய்டாவின் குடியிருப்புகளில் வளர்ப்பு பிராணியை முன்னிட்டு அடிக்கடி சச்சரவு ஏற்படுவதால் தனித்தனி லிப்ஃட் வசதி அமைக்க பலர் குடியிருப்பு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.