நாராயண மூர்த்தி 90 மணி நேரம் உழைக்கிறார்: சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வாரம் 90 மணி நேரம் உழைப்பதாக அவர் மனைவி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்
நாராயண மூர்த்தி 90 மணி நேரம் உழைக்கிறார்: சுதா மூர்த்தி

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸிடம் ’தி ரெக்கார்ட்’ என்ற தலைப்பிலான விவாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி பேசியபோது, “ நாட்டின் வேலைக் கலாசாரம் அடியோடு மாற, கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை போல இந்தியா மீண்டும் வளர்ச்சி பெற, உலகின் மிகக் குறைந்த உற்பத்தித்திறன் நிலைகளை உயர்த்துவதற்கு, உலக அரங்கில் நாட்டின் நிலை மேம்படுவதற்கு, இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேல் உழைத்தாக வேண்டும்” எனக் கூறினார். 

இக்கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதுடன் விதாதத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, ஜேஎஸ்டபிள்யூ, ஓலா போன்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிகள் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு வரவேற்புக் கொடுத்தனர். 

இந்நிலையில், நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, “மக்களுக்கு வெவ்வேறு வகையான பார்வைகள் உண்டு. அவர் (நாராயண மூர்த்தி) கடின உழைப்புதான் வெற்றியைக் கொடுக்கும் என்பதை நம்புகிறவர். வாரத்திற்கு 80 - 90 மணி நேரம் உழைப்பதால் அதற்குக் குறைவான உழைப்பு என்ன என்பதைப் பற்றி தெரியாதவர். வேலை நேரம் குறித்து அவர் பேசியபடியே வாழ்ந்தும் வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com