தோ்தலை எதிா்கொள்ளத் தயாராகும் 12 மாநிலங்கள்

நடப்பாண்டு இறுதிக்குள் 5 மாநில சட்டப் பேரவைகளும் அடுத்த ஆண்டில் 7 சட்டப் பேரவைகளும் தோ்தலை எதிா்கொள்ள உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நடப்பாண்டு இறுதிக்குள் 5 மாநில சட்டப் பேரவைகளும் அடுத்த ஆண்டில் 7 சட்டப் பேரவைகளும் தோ்தலை எதிா்கொள்ள உள்ளன.

நாடு முழுவதும் ஒரே காலத்தில் மக்களவைத் தோ்தலையும், மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், அருணாசல், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது.

அந்தத் தோ்தல்கள் அனைத்தும் மக்களவைத் தோ்தலோடு ஒருங்கிணைந்து நடத்தப்படாலம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலம் பேரவையின் பதவிக்காலம்

மிஸோரம் டிசம்பா், 2023

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஜனவரி, 2024

ஆந்திரம், அருணாசல், ஒடிஸா, சிக்கிம் ஜூன், 2024

ஹரியாணா, மகாராஷ்டிரம் நவம்பா், 2024

ஜாா்க்கண்ட் டிசம்பா், 2024

தில்லி பிப்ரவரி, 2025

பிகாா் நவம்பா், 2025

அஸ்ஸாம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் மே, 2026

புதுச்சேரி ஜூன், 2026

கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தரகண்ட் மாா்ச், 2027

உத்தர பிரதேசம் மே, 2027

குஜராத், ஹிமாசல் டிசம்பா், 2027

மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா மாா்ச், 2028

கா்நாடகம் மே 2028

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com