விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1: ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்பது என்ன?

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் நிலைநிறுத்தப்படும் லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் பகுதியின் தனித்துவம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1: ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்பது என்ன?
Published on
Updated on
2 min read

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது நிலைநிறுத்தப்படும் லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் பகுதியின் தனித்துவம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

சுமார் 1 மணி நேரம் 12 நிமிடங்களில், ஆதித்யா விண்கலம் தனித்து செயல்படும். 

நிலவை ஆராய சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமைந்துள்ளது.

இதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது. செவ்வாய் கிரகம், நிலவைத் தொடா்ந்து சூரியனின் வெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.

அதன்படி, ஆதித்யா எல்-1 எனும் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (ஐஐஏ), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (ஐயுசிஏஏ), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (ஐஐஎஸ்இஆா்) ஆகியவை முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. 

‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ 
பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும். 

இந்த இடத்தில், சூரியனைப் பார்த்த கோணத்தில் விண்கலம்  நிலைநிறுத்தப்பட்டு, அதில் இருக்கும் 7 விதமான கருவிகள் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலமானது சூரியனின் வெப்பச்சூழல், பிளாஸ்மா அனலைசர், காந்த புலன்களின் இருப்பிடம் என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல்களை அனுப்பவிருக்கிறது.

செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் பாய்ந்த ஆதித்யா விண்கலம், சரியாக 125 நாள்கள் பயணித்து ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’  என்ற இடத்தை அடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.

இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவா் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சோ்ந்தவா்.

இதனிடையே, விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவும் தனி இடம் பிடிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com