விரைவில் நடமாடும் சமையலறைகள் தொடங்கப்படும்: ம.பி.முதல்வர்

தீனதயாள் ரசோய் யோஜனா திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களின் விலை குறைக்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். 
விரைவில் நடமாடும் சமையலறைகள் தொடங்கப்படும்: ம.பி.முதல்வர்
Updated on
1 min read

தீனதயாள் ரசோய் யோஜனா திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களின் விலை குறைக்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். 

மாநில தலைநகரில் உள்ள குஷாபாவ் தாக்கரே அரங்கத்தில் தீனதயான் ரசோய் யோஜனாவின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கிவைத்தபோது முதல்வர் சௌஹான் இதை தெரிவித்தார். மாநிலத்தில்  66 புதிய தீனதயாள் ரசோய் மையங்களையும் அவர் திறந்து வைத்தார். மேலும் வீடற்ற 38,505 பேருக்கு நிலப் பட்டாக்களை வழங்கினார். 

இந்த விழாவில் பேசிய சௌகான்.. 

கடந்த 2017-ல் தீனதயாள் ரசோய் யோஜனா திட்டத்தைத் தொடங்கினோம். அதனடிப்படையில் இதன் மூன்றாவது கட்டமாக, இந்த திட்டத்தின் கீழ் ரூ.10-க்கும் விற்கப்படும் உணவு ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும்.

தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடத்திற்கு அருகில் மலிவு விலையில் உணவு வழங்க நகர்ப்புறங்களிலும் நடமாடும் சமையலறைகள் விரைவில் தொடங்கப்படும். இதனால் தொழிலாளர்கள் மலிவு விலையில் உண்ண முடியும் என்றும் அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com