நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: உத்தவ் தாக்கரே 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். 
நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: உத்தவ் தாக்கரே 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அந்தர்வாலி சாரதி கிராமத்தில் போராட்டக்காரர்களை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு பிரதமரிடம் (மோடி) நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். நாங்கள் ஆட்சி செய்த காலத்திலும் போராட்டங்கள் நடந்ததாகவும் ஆனால் யார் மீதும் தடியடி நடத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு பார்சு கிராமத்திலும் இதேதான் நடந்தது, இதுதான் ஜனநாயகமா?. போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மேலும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து, சட்டத்தை மாற்றி மராத்தா இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மகாராஷ்டிரத்தில் உள்ள ஜல்னா மாவட்டம் அந்தா்வாலி சாரதி கிராமத்தில், கல்வி மற்றும் அரசுப் பணிகளில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மனோஜ் ஜரங்கே என்ற மராத்தா சமூக தலைவா் தலைமையில், இந்தப் போராட்டம் நிகழ்ந்தது. இதனிடையே, உண்ணாவிரதம் காரணம் மனோஜின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரைக் காவல் துறையினா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்ல முயன்றனா். அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் வாகனங்கள் மீது சிலா் தாக்குதல் நடத்தியதால், போராட்டம் வன்முறையாக மாறியது’ என்று தெரிவித்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்வதற்கு அவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன் கண்ணீா்புகைக் குண்டுகளை வீசினா். அப்போது காவல் துறையினா் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

போராட்டக்காரா்கள் நடத்திய தாக்குதலில் சுமாா் 40 போலீஸாா் மற்றும் சிலா் காயமடைந்ததாகவும், 15 அரசுப் பேருந்துகள் மற்றும் சில தனியாா் வாகனங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 307-ஆவது பிரிவு (கொலை முயற்சி), 333 (அரசு ஊழியரை வேண்டுமென்றே தாக்குவது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வன்முறையில் ஈடுபட்டதாக 360-க்கும் மேற்பட்டவா்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவா்களில் 16 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மற்றவா்களை அடையாளம் காண வேண்டியுள்ளது. தற்போது அந்தா்வாலி சாரதியில் சூழல் கட்டுக்குள் இருப்பதாகவும், அங்கு காவல் துறை மற்றும் மாநில ரிசா்வ் காவல் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ள மராத்தாக்களுக்கு மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com