கேரளத்தில் கனமழைக்கு 2 பேர் பலி! 

கேரளத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
கேரளத்தில் கனமழைக்கு 2 பேர் பலி! 

கேரளத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்டோவில் பயணித்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகன் காணாமல் போயுள்ளார். 

பெண்ணின் கணவர், மகள் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று காலை சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்த கனமழை காரணமாக, சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூழையாறு அணையின் ஒரு பகுதி திறக்கப்பட்டதையடுத்து, பம்பா ஆற்றின் நீர்மட்டமும் உயரும் என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், கோனி தாலுகாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

அடுத்த 5 நாள்களுக்கு கேரளாவில் மிதமான மழை தொடரும் என்றும், செப்டம்பர் 4 முதல் 8 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

இதனிடையே, பகலில் கேரள கடலோரப் பகுதிகளில் அதிக அலைகள் எழ வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மற்றும் கரையோர வசிப்பவர்கள் அபாயகரமான பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும், கடற்கரை தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com