

நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டரின் முப்பரிமாண படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரோவர் எடுத்துள்ளது.
நிலவின் தரைப்பரப்பை காட்டும் வகையிலும், நிலவின் பரப்பில் லேண்டர் கலன் நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் வகையிலும் முப்பரிமான படம் உள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், நிலவின் மேற்பரப்பிலுள்ள லேண்டரின் முப்பரிமான படம் கிடைத்துள்ளது.
எலக்ட்ரோ ஆப்டிக் முறையில் மேம்படுத்தப்பட்ட 'நவ்கேம் ஸ்டீரியோ' தொழில்நுட்ப வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் இடது, வலது என முப்பரிமாணங்களையும் ரோவர் படம்பிடித்துள்ளது.
இந்த முப்பரிமாண படத்தில் சிவப்பு நிறம் இடதையும், நீலம் மற்றும் பச்சை நிறம் வலதையும் குறிக்கிறது. இந்த இரு நிறங்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு முப்பரிமாணத்தைக் குறிக்கிறது. முப்பரிமாண கண்ணாடியில் இந்தப் படத்தைக் காணலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.