சந்திரயான் - 3 லேண்டரின் இருப்பிடம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!

சந்திரயான் -3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது.
சந்திரயான் - 3 லேண்டரின் இருப்பிடம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!

சந்திரயான் -3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் சந்திரயான் -3 நிலை கொண்டுள்ள நிலையில் நாசா புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சந்திரயான் லேண்டர் பாதிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய ஆர்பிட்டர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா், ஆக. 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. மேலும், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் நிலவின் மீது தரையிறங்கி, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகளின் உதவியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது.

நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டரின் முப்பரிமாண படத்தை திங்கள்கிழமை(செப்.5) இஸ்ரோ வெளியிட்டது. இந்தப் படத்தை நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரோவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com