

பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்பிஜி) பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா(வயது 61) உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிறப்பு பாதுகாப்பு படையின் இயக்குநராக செயல்பட்டு வருபவர் அருண் குமார். 1987-ஆம் ஆண்டு கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவருக்கு கடந்தாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அருண் குமார், புதன்கிழமை உயிரிழந்தார்.
முன்னதாக கேரள மாநிலத்தில் பல்வேறு பதவிகள் வகித்துள்ள அருண் குமார் சின்ஹா, உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.