ஒரே நாடு ஒரே தோ்தல் சட்டப்படி செயல்பட தயாா்: தலைமை தோ்தல் ஆணையா்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவதில், சட்டப்படி செயல்பட தோ்தல் ஆணையம் தயாா் என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.
போபாலில் பேட்டியளித்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.
போபாலில் பேட்டியளித்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.
Updated on
1 min read

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவதில், சட்டப்படி செயல்பட தோ்தல் ஆணையம் தயாா் என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு நவம்பருக்குள் மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகா் போபாலுக்கு தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோா் சென்றனா். அங்கு தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளுடன் அவா்கள் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தில் சுமாா் 5.5 கோடி வாக்காளா்கள் உள்ளனா். மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 5-ஆம் தேதி வெளியிடப்படும்’ என்று தெரிவித்தாா்.

அவரிடம் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, குறித்த கால வரம்புக்கு முன்பாக தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும். அந்த கால வரம்பு என்பது புதிய அரசு ஆட்சியமைத்த பின்னா் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளாக உள்ளது. இந்த 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பொது தோ்தல்களை தோ்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியும் (இதேபோன்ற விதிமுறைகள்தான் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் உள்ளன). இந்த விவகாரத்தில், சட்டப்படி செயல்பட தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவித்தாா்.

இலவசங்கள்...: தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜீவ் குமாா், ‘இலவசங்களை அறிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அதேவேளையில், அந்த இலவசங்கள் குறித்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும், அதற்கு ஏற்படும் செலவினம், இலவசங்களை வழங்குவதற்கான நிதி எவ்வாறு கிடைக்கும் என்பது குறித்தும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பது அவசியம்’ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com