ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

 
ஜகாா்தா: ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது என்றும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்தாவில் 20 ஆவது ஆசியான்-இந்தியா மற்றும் 18-ஆவது கிழக்காசிய உச்சிமாநாடுகள் வியாழக்கிழமை (செப்.7) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு இந்தோனேசியா சென்றடைந்தாா்.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பேசுகையில், ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது.  இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இங்கு அனைவரின் குரல் கேட்கப்படுகிறது மற்றும் ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது.

எங்கள் கூட்டாண்மை நான்காவது தசாப்தத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான யுக்தி ரீதியிலான நட்புறவைக் கொண்டாடி, இருதரப்பு உறவில் புதிய ஆற்றலை அளித்துள்ளது. ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. 

"எங்கள் வரலாறு மற்றும் புவியியல் இந்தியாவையும் ஆசியானையும் ஒன்றிணைக்கிறது. அதனுடன், நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் அமைதி, செழிப்பு மற்றும் பல துருவ உலகம் பற்றிய நமது பகிரப்பட்ட நம்பிக்கை.

மேலும்  ‘ஆசியான் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையான ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டின்’ முக்கிய அங்கமாகும். ஆசியான்-இந்தியா மையம் மற்றும் இந்தோ-பசிபிக் பற்றிய ஆசியானின் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. ஆசியான் பிராந்தியத்துடனான நமது உறவை மேலும் பலப்படுத்துங்கள்’ என்று அவர் பேசினார். 

ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆசியான் அமைப்பின் பிற தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடியை புலம்பெயர்ந்த இந்தியர்கள் கைகுலுக்கி வரவேற்றனர். அவருக்கு  இந்திய கலாசார நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு மோடி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com