மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் பல்லேல் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா். 45-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா்.
மியான்மா் நாட்டின் எல்லையொட்டிய தெங்னௌபால் மாவட்டத்தில் பல்லேல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் ஆயுதமேந்திய 2 குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 2 போ் உயரிழந்தாா்.
இந்தத் துப்பாக்கிச் சண்டை குறித்து தகவலறிந்து, அருகிலிருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்கள் பல்லேல் பகுதி நோக்கி விரைந்தனா். அவா்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ராணுவ படைப்பிரிவு வீரா்கள் கண்ணீா்ப்புகை குண்டுகளை வீசினா்.
துப்பாக்கிச் சண்டை ஓய்ந்துள்ளதாகவும் அப்பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டவர பாதுகாப்புப் படையினா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரா் உள்பட 45-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை குகி பழங்குடிகள் எதிா்த்ததைத் தொடா்ந்து உருவான மோதல் வன்முறையாக மாறி 4 மாதங்களாகத் தொடா்ந்து வருகிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனா். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.