
உத்தர பிரதேச மாநிலத்தில் நாகப்பாம்பை கொன்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், புடான் பகுதியில் அரிசியை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வருபவர் சுக்பீர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் நாகப்பாம்பு ஒன்றை குச்சியைக் கொண்டு அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதனை யாரோ விடியோ எடுத்து விலங்குகள் நல ஆர்வலர் விக்கேந்திர ஷர்மாவுக்கு அனுப்பி உள்ளனர். ஷர்மா அளித்த தகவல் மற்றும் விடியோவின் பேரில் காதர்சௌக் காவல் நிலையத்தில் சுக்பீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பாம்பு அரிதான இனங்கள் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது என்று வனத் துறை அதிகாரி கூறினார். இதனிடையே தலைமறைவாக இருக்கும் சுக்பீரை காவல்துறைனிர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.