விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான இந்தியாவின் சட்டம் உலகத்துக்கே முன்னுதாரணம்

பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் ஆகியவை தொடர்பான இந்தியாவின் சட்டம் ஒட்டுமொத்த உலகமும் பின்பற்றத்தக்க வகையில் முன்னுதாரணமாகத் திகழ்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
புது தில்லியில் விவசாயிகளின் உரிமை தொடர்பான முதல் உலகளாவிய கருத்தரங்கையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. உடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
புது தில்லியில் விவசாயிகளின் உரிமை தொடர்பான முதல் உலகளாவிய கருத்தரங்கையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. உடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
Updated on
1 min read

புது தில்லி: பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் ஆகியவை தொடர்பான இந்தியாவின் சட்டம் ஒட்டுமொத்த உலகமும் பின்பற்றத்தக்க வகையில் முன்னுதாரணமாகத் திகழ்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
தில்லியில் விவசாயிகளின் உரிமை தொடர்பான முதல் உலகளாவிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நான்கு நாள்களுக்கு நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது:
பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் சட்டத்தை இந்தியா கடந்த 2001}இல் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் விவசாயிகள் விதைகளைப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும், பகிர்ந்து கொள்ளவும், விற்கவும் இயலும். மேலும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான விதைகளைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். 
பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் ஆகியவை தொடர்பான இந்தியாவின் சட்டம் ஒட்டுமொத்த உலகமும் பின்பற்றத்தக்க வகையில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
பருவநிலை மாற்றம் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஐ.நா. சபை ஏற்படுத்தியுள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டவும் இது உதவுகிறது. 
2023}ஆம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. உணவு மற்றும் வேளாண்மைக்கான பயிர் மரபணு ஆதாரங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. 
இது, உணவு மற்றும் வேளாண்மைக்கு பயிர் மரபணு ஆதாரங்களைப் பாதுகாப்பது, பயன்படுத்துவது, நிர்வகிப்பது தொடர்பான சர்வதேச நாடுகளிடையே செய்து கொள்ளப்பட்டுள்ள முக்கியமான ஒப்பந்தங்களில் 
ஒன்றாகும்.
இந்தியா செழுமையான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது. உலக சமூகத்துக்கு இது ஒரு புதையலைப் போன்றதாகும். நமது விவசாயிகள் பயிர்களின் உள்ளூர் ரகங்களைப் பாதுகாத்து வந்துள்ளனர். இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு மற்றும் சத்துணவுப் பாதுகாப்ப 
உறுதி செய்துள்ளது. 
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பவர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், கொள்கைகளை உருவாக்குவோர் ஆகியோரின் முயற்சிகளும் அரசு ஆதரவும் இணைந்து நாட்டின் வேளாண் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளன 
என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com