
சீதாமர்ஹி (பிகார்)): பிகாரில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"பிகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தின் தும்ரா வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவை உட்கொண்ட சுமார் 50 பள்ளி மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால் மயக்கம் அடைந்துள்ளனர்."
இதையடுத்து அனைத்து குழந்தைகள் சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது அனைத்து குழந்தைகளின் உடல் நிலை சீராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சதார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுதா ஜா கூறுகையில், "மதிய உணவில் பல்லி கிடந்ததால், அதை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர், கவலைப்பட ஒன்றுமில்லை. அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் உடன் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.