

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால அனுபவத்தை உறுப்பினர்கள் பகிரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிறப்புக் கூட்டத்துக்கான காரணத்தைக் கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சம்விதான் சபா தொடங்கி நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், கற்றுக்கொண்ட பாடங்கள் உள்ளிட்டவற்றை உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சிறப்புக் கூட்டத்தொடரையோட்டி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.