ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்! 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்! 

வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 
Published on

வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் செப்டம்பர் 1-ம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்தது. 

இதையடுத்து நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் கோயலின் காவல் மேலும் 14 நாள்கள் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கனரா வங்கிக்கு ரூ.538 கோடி இழப்பு ஏற்படுத்தியதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் முன்னாள் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com