கோழிக்கோட்டில் 2 நாள்களுக்கு கல்விநிறுவனங்கள் விடுமுறை!

வடக்கு கேரள மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோழிக்கோட்டில் 2 நாள்களுக்கு கல்விநிறுவனங்கள் விடுமுறை!

வடக்கு கேரள மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தின் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை இறந்தவர்கள் உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 7 பஞ்சாயத்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா வெளியிட்ட முகநூல் பதிவில், 

நிபா வைரஸ் பரவியுள்ளதையடுத்து இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்யலாம். பல்கலைக்கழக தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை. 

கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடா்புலிருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புணேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

மாநிலத்தில் காணப்படும் வைரஸ் திரிபு வங்கதேசத்தின் மாறுபாடாகும், இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. இதன் தொற்று குறைவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

வைரஸ் பாதித்து தொடர்பில் இருந்த 76 பேரின் உடல் நிலை சீராக உள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

லேசான அறிகுறிகளைக் கொண்ட 13 பேர் தற்போது மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 9 வயதுக் குழந்தை மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com