யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு நாளை(செப். 15) தொடக்கம்!

2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு நாளை(செப். 15) தொடங்கவிருக்கிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு நாளை(செப். 15) தொடங்கவிருக்கிறது. 

நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. 

இந்நிலையில் 1,105 காலி பணியிடங்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 12 ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. 

இதையடுத்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நாளை(செப். 15) தொடங்கவிருக்கிறது. செப். 15, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது. 

டிசம்பரில் இதற்கான முடிவுகள் வெளியான பின்னர் நேர்காணல் தேர்வு தில்லியில் நடைபெறும் . 

தேர்வு குறித்த விரிவான விவரங்களை https://upsc.gov.in/ என்ற யுபிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com