நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டியுள்ளது. அதில் முதல் முறையாக கூட்டத்தொடரை நடத்தும் வகையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னா், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  சிறப்புக் கூட்டத்தொடா் அமா்வுகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நாளை நடைபெறவுள்ளன.

இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின்போது மேலும் சில புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்து எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அதிா்ச்சி அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்குரைஞா்கள் திருத்த மசோதா, பத்திரிகைகள்-இதழ்கள் பதிவு மசோதா, தபால் நிலைய மசோதா உள்ளிட்டவற்றின் மீதும் சிறப்புக் கூட்டத்தொடரின்போது விவாதம் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com