எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!

ஆதித்யா எல்1 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!
Published on
Updated on
1 min read

ஆதித்யா எல்1 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

உந்து விசை இயக்கப்பட்டு புவி வட்டப்பாதை தொலைவு படிப்படியாக ஐந்து முறை அதிகரிக்கப்ப்பட்டது. 

இதனிடையே, ஆதித்யா விண்கலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் புவிவட்டப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு சூரியனை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

இது சுமார் 110 நாள்கள் பயணத்துக்குப் பின்னா் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com