2024ல் ஜேஇஇ, நீட், கியூட் தேர்வுகள் எப்போது? 

2024ஆம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போதும் நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ari10exam_1009chn_11_4
ari10exam_1009chn_11_4

புது தில்லி: தேசிய தேர்வுகள் முகமை, நாட்டின் மிக முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போதும் நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது ஜேஇஇ தேர்வு, இதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடிகளில் சேர்க்கை பெற முடியும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தது க்யூட் தேர்வு. இது 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருப்பதாகவும், இளநிலை நீட் தேர்வு மே மாதம் நடைபெறவிருப்பதாகவும், குறிப்பாக மே 5ஆம் தேதி நடைபெறலாம் எனறும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2024 - 25ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த காலண்டரையும் என்டிஏ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை, என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஜேஇஇ
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தேதிகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. அதுபோல, நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் விரைவாகவே தொடங்கவிருக்கின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் அல்லது தேர்வுகள் குறித்து jeemain.nta.nic.in அல்லது nta.ac.in -இல் அறியலாம்.


நீட்
2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com