கல்லூரி விடுதி உணவில் தவளை!

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துவரும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்த நிலையில் தவளை கிடந்துள்ளது. 
கல்லூரி விடுதி உணவில் தவளை!

ஒடிசா மாநிலத்திலுள்ள பொறியியல் கல்லூரி விடுதி உணவில் இறந்த நிலையில் தவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அக்கல்லூரி மாணவர்கள் இணையத்தில் பதிவேற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இயங்கிவரும் கலிங்கா தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல் பயின்று வருகின்றனர். அவர்களின் பெரும்பாலானோர் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், இக்கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்துவரும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்த நிலையில் தவளை கிடந்துள்ளது. 

அதனைத் தட்டியிலிருந்து வெளியே எடுத்துப்போட்ட மாணவர்கள் அதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது தொடர்பான பதிவில், இது புவனேஸ்வரிலுள்ள கல்லூரி. பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் 42வது இடத்தில் உள்ளது. இங்கு பொறியல் படிக்க தங்கள் மாணவர்களுக்காக சராசரியாக ரூ.17.5 லட்சத்தை பெற்றோர்கள் செலவிடுகின்றனர். அக்கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் உணவு இதுதான். ஏன் இந்தியாவிலுள்ள மாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் வசதிகளுக்காக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர் என பிறகு ஆச்சரியப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளது. விடுதியில் இதுபோன்ற அஜாக்கிரதையான முறையில் உணவு பரிமாறப்பட்டது தவறுதான். இதற்காக உணவு வழங்கும் நிறுவனத்திடத்திற்கு வழங்கும் தொகை அவர்களிடமிருந்து பெற்றுத்தரப்படும் என கல்லூரி நிர்வாகம் பதிலளித்துள்ளது. 

உணவுக்காக வழங்கும் ஒருநாள் பணத்தை உணவு வழங்கும் நிர்வாகத்திடம் பிடித்தம் செய்வதுதான் கல்லூரி நிர்வாகம் இந்த செயலுக்கு அளிக்கும் தீர்வா? என மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com