பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்குதாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செவ்வாய்க்கிழமை (செப்.26) அறிவிக்கப்பட்டது.
waheeda-rehman
waheeda-rehman
Updated on
1 min read


புது தில்லி: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செவ்வாய்க்கிழமை (செப்.26) அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு படமான ‘ரோஜாலு மராயி’ மூலம் கடந்த 1955-ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமான நடிகையும், நடனக் கலைஞருமான வஹீதா ரஹ்மான் (85), ‘பியாசா’, ‘சிஐடி’, ‘கைடு’, ‘காகஸ் கே ஃபூல்’, ‘காமோஷி’, ‘திரிசூல்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவா்.

எம்ஜிஆா் நடிப்பில் உருவான ‘அலிபாபவும்; 40 திருடா்களும்’ படத்தில் ‘சலாம் பாபு சலாம் பாபு’ என்ற பாடலில் நடனமாடி தமிழ் திரையுலக ரசிகா்களுக்கு அறிமுகமான வஹீதா ரஹ்மான், கமல் நடித்த ‘விஸ்வரூபம்-2’ மூலம் தமிழ் படத்தில் மீண்டும் நடித்தாா்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வஹீதா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இரு முறையும், பிலிம்ஃபோ் உள்பட பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்றவா். மேலும், இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

சென்னை செங்கல்பட்டில் பிறந்தவரான நடிகை வஹீதா ரஹ்மான், தற்போது பெங்களூரில் வசித்து வருகிறாா். இந்நிலையில், நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கி கௌரவிக்கப்படுவதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

பிரதமா் வாழ்த்து

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்திய திரைத்துறையில் அவரது பயணம் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. திறமை, அா்ப்பணிப்பு மற்றும் கருணையின் அடையாளமாக அவா், நமது திரைத்துறை சிறந்த பாரம்பரியத்தை உணா்த்துகிறாா். அவருக்கு எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com