அயோத்தி கோயிலில் 12 மணி நேரத்தில் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாம்: கோயில் கட்டுமானக் குழு தகவல்

அயோத்தியில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அயோத்தி கோயிலில் 12 மணி நேரத்தில் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாம்: கோயில் கட்டுமானக் குழு தகவல்


புது தில்லி: அயோத்தி ராமா் கோயிலின் மூலவரான குழந்தை ராமரின் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும்,  கோயில் 12 மணி நேரம் திறந்திருந்தாலும் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய முடியும் என கோயில் கட்டுமானக் குழுத் தலைவா் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலையைச் செய்வதற்குத் தேவையான இரு அரியவகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு, செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயில் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டும் சூழலில், ‘கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமரின் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி திருநாளான ஜனவரி 14-ஆம் தேதி முதல் பிரதிஷ்டை தொடா்பான நடைமுறை தொடங்கப்படும் கட்டுமானக் குழுத் தலைவா் மிஸ்ரா தகவல் தெரிவித்தார். 

அயோத்தி ராமா் கோயில் 12 மணி நேரம் திறந்திருந்தாலும் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய முடியும்.

கோயில் தரைதளத்தில் 160 தூண்கள் அமைக்கப்படுவதாகவும், கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. அதேபோல், கல் தொகுதிகளை இணைக்க தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு இதுவரை சுமாா் ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து சுமார் 3,500 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கட்டுமானப் பணிக்கு சுமாா் ரூ.1,700 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை செலவிடப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு உ.பி அரசு அல்லது மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை. 

பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளையிடமே கோயிலின் அனைத்து திட்டங்களின் பொறுப்புகளையும், பணிகளை ஒப்படைத்தார். எனவே, இந்த கோயில் மக்களின் நம்பிக்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த  அறக்கட்டளைக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. இந்த அறக்கட்டளையில் அரசு பணம் எதுவும் இல்லை. 

அறக்கட்டளை சேர்ந்தவர்கள் பிற அமைப்புகளின் உதவி மற்றும் சுமார் 4 லட்சம் கிராமங்களுக்குச் சென்று பக்தர்களைச் சந்தித்து நன்கொடை வசூலித்தார்கள். அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். சுமார் ரூ.3,500 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது என்று மிஸ்ரா தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com