கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 52 பேர் பலி, 50 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2023, 10:17 am

DIN


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். 

மஸ்துங் மாவட்டத்தில் முகம்மது நபியின் பிறந்தநாளான ஈத் மிலாடி நபி கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற மக்கள் ஒன்றாகக் கூடியிருந்தனர்.

அப்போது மதீனா மசூதிக்கு அருகே திடீரென இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

குண்டுவெடிப்பு சம்பவம் குறிவைத்து நடத்தப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறையினர் அவசரநிலையை அறிவித்துள்ளனர். தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.