குளிர்கால செயல் திட்டத்தை அறிவித்தார் கேஜரிவால்!

குளிர்காலத்தில் காற்று மாசுவை எதிர்கொள்ள தில்லி அரசின் செயல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 
குளிர்கால செயல் திட்டத்தை அறிவித்தார் கேஜரிவால்!

குளிர்காலத்தில் காற்று மாசுவை எதிர்கொள்ள தில்லி அரசின் செயல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசியது, 

மின்சார பேருந்துகள் போன்ற அரசின் பல்வேறு முன்முயற்சிகளால் கடந்த 8 ஆண்டுகளில் கடுமையான மாசுவின் அளவை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய பூசா பயோடிகம்போசர் நெல் வைக்கோலை 15-20 நாள்களில் உரமாக மாற்றக்கூடிய நுண்ணுயிர் கரைசல் ஆகும். விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூசா பயோடிகம்போசர் செடிகள் எரிவதைத் தடுக்கக்கூடும்.  

தூசி மாசுபடுவதைத் தடுக்க 530 தண்ணீர் தெளிப்பான்களை அரசு பயன்படுத்துகிறது. மேலும், வாகனங்களின் மாசு சான்றிதழ்களைச் சரிபார்க்க 385 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் 2018-ல் தடை விதித்தது. உத்தரவை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2014-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பொது இடங்களில் நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழைய கார்கள் ஓட்டுவதைத் தடுத்து நிறுத்தப்படும். 

தில்லியில் திறந்தவெளியில் குப்பைகளை எரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதைக் கண்காணிக்க 611 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், மக்கள் அனைவரும் கீரின் தில்லி மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து மாசு ஏற்படுத்தும் செயல்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com