
கோப்புப்படம்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய ஆயுதப்படையில் ஆயுதப்படை காவலர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மற்றும் நடைபெற்று வந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கேணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள், தங்களுடைய தாய் மொழியில் தேர்வு எழுதுவதுடன் அவர்கள் பயன் பெறவும் உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G